< Back
மாநில செய்திகள்
சென்னையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை
மாநில செய்திகள்

சென்னையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை

தினத்தந்தி
|
8 Feb 2024 8:32 AM IST

சென்னையில் குறும்பட இயக்குனர் வீட்டில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை கொரட்டூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக கொரட்டூரில் உள்ள குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மாவோயிஸ்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை வைத்து,ஐதராபாத்தில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்