< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
|27 March 2024 7:31 AM IST
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 5 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய கர்நாடகத்தைச் சேர்ந்த நபர்கள் சென்னையில் தங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை மண்ணடி உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.