< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை, குமரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
|24 Sept 2024 7:57 AM IST
தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் 12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழுகிணறு, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.