< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெய்வேலி : என்எல்சி கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் - எலி கிடந்ததாக குற்றசாட்டு
|5 Jan 2023 1:06 PM IST
என்எல்சி கேன்டீனில் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
நெய்வேலி,
நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் சுரங்கத்தொழிலாளர்கள் வழக்கம் போல் உணவு அருந்தினர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நடக்குறைவால் பாதிக்கப்பட்ட 22 பேர் உடனடியாம மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்த நிலையில், சுரங்கத்தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. உணவில் எலி கிடந்ததாக வெளியான புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.