< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அடுத்த நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு திட்டம்: சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் துவக்கம்
|26 Nov 2022 8:41 AM IST
பேருந்து நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு திட்டம் இன்று முதல் சென்னை மாநகர பேருந்துகளில் தொடங்கப்படுகிறது.
சென்னை,
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக "புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு" திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் சென்னை மாநகர பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு பேருந்தில் பொருத்தப்படும் ஸ்பீக்கர் மூலம் பயணியருக்கு தெரிவிக்கப்பட உள்ளது.
பேருந்து நிறுத்தத்திற்கு 300 மீட்டர் முன்பாக பேருந்து நிறுத்ததின் பெயர் குறித்த தகவல் ஒலிபரப்பப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.