< Back
மாநில செய்திகள்
செய்திகள் சில வரிகளில்......
மாநில செய்திகள்

செய்திகள் சில வரிகளில்......

தினத்தந்தி
|
14 Jun 2024 5:00 PM IST

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* மாணவர்களுக்கு ரூ.1,000-வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

* நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

* பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20-ந்தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

* குவைத் தீவிபத்து: பலியான இந்தியர்களின் உடல்கள் கொச்சி கொண்டு வரப்பட்டன. பலியான 7 பேரின் உடல்களும் தமிழகம் கொண்டு வரப்பட்டன.

* 10 ஆண்டுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்.. அமெரிக்கா-உக்ரைன் தலைவர்கள் கையொப்பம்.

* சென்னையில் டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் ஜெர்மனி- ஸ்காட்லாந்து மோதல்

* டி20 உலகக்கோப்பை; பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்.

* ஆந்திர துணை முதல்-மந்திரியாக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்