< Back
மாநில செய்திகள்
காமாட்சி அம்மன் திருக்கல்யாணம்
நாமக்கல்
மாநில செய்திகள்

காமாட்சி அம்மன் திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
10 March 2023 12:02 AM IST

திருச்செங்கோட்டில் காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சி கடந்த மாதம் 28-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. திருவிளக்கு பூஜை, தீர்த்தக்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் காமாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் சீர்வரிசை, பட்டுப்புடவை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஊர்பொதுமக்கள் மொய் எழுதி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மற்றும் நகர் மன்ற உறுப்பினர் மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்