< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஸரீனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!
|20 May 2022 3:39 PM IST
உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை நிகத் ஸரீனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்த 12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் தங்கம் வென்றார். இந்த நிலையில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஸரீனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பெண்களுக்கான உலகக்குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அதிரடியாக ஆடித் தங்கம் வென்றுள்ள நிகத் ஸரீனுக்குப் பாராட்டுக்கள். இந்த வெற்றிக்கு நீங்கள் முழுதும் தகுதியானவர்.
நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான உங்களது வெற்றிக்கதை, பல இளம்பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடரமிகச் சிறந்த உத்வேகமாக விளங்கும்' என்று கூறியுள்ளார்.