சென்னை
5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்ககோரி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
|5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்ககோரி காசிமேடு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் மீனவர் தந்தை கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவரான வக்கீல் செல்வராஜ் குமார் தலைமையில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9.30 முதல் இன்று (வெள்ளிக்கிழமை ) மாலை வரை 33 மணிநேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரம் கல்வி, வேலை வாய்ப்பில் உயர தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பருவத ராஜகுல பட்டினவர், செம்படவர் உள்ளிட்ட பிரிவு மீனவர்கள் வாழ்வில் ஒளியேற்ற 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி, மாமல்லபுரம் உள்பட பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்தும் ஏராளமான மீனவ சங்க பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.