< Back
மாநில செய்திகள்
வாரச்சந்தை, பஸ்நிலைய பிரச்சினைகளுக்கு  விரைவில் முற்றுப்புள்ளி
சிவகங்கை
மாநில செய்திகள்

வாரச்சந்தை, பஸ்நிலைய பிரச்சினைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

தினத்தந்தி
|
19 May 2022 4:58 PM IST

கல்லல் யூனியன் பகுதியில் வாரச்சந்தை, பஸ் நிலையம் பிரச்சினைக்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று யூனியன் தலைவர் தெரிவித்தார்.

காரைக்குடி,

கல்லல் யூனியன் பகுதியில் வாரச்சந்தை, பஸ் நிலைய பிரச்சினைக்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று யூனியன் தலைவர் தெரிவித்தார்.

யூனியன் கூட்டம்

கல்லல் யூனியன் கூட்டம் அதன் தலைவர் சொர்ணம் அசோகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள், மேலாளர் சுந்தரம் மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- முத்தழகு, எனது வார்டில் சிராவயல் புதூர் -துளாவூர் இடையே குன்றக்குடி செல்லும் முக்கிய சாலை 1959-ல் காமராஜர் காலத்தில் போடப்பட்டது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 1½ கி.மீ வருவதால் அவர்களின் அனுமதிக்காக காத்திருக்கிறது. விரைவில் சாலை அமைக்க ஏதேனும் வழி ஏற்படுத்த வேண்டுகிறேன்.

சையது அப்தாஹிர், திட்டப்பணிகளை தேர்வு செய்து, அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்து வேலைக்கான உத்தரவு கொடுத்தும் வேலை நடைபெறவில்லை. எனவே ஒப்பந்த காரர்களுக்கு வேலையை முடிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆணையாளர் இளங்கோ, ஊராட்சி வாரியாக கண்மாய் களை கணக்கீடு செய்து குடிமராமத்து பணிகள் நடைபெற்ற கண்மாய்கள் தவிர மற்ற கண்மாய்களின் தேவைக்கேற்ப முன்னுரிமை அளித்து அவற்றை சீரமைத்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்தியாவசிய தேவை

சங்கீதா, பட்டணம்பட்டியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் விளக்குகள் எரியவில்லை. அடிக்கடி மின் சாதனங்கள் பழுது ஆகின்றன. பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை

ஆணையாளர், மின்சார வாரிய உயர் அதிகாரிகளுடன் பேசி கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

தலைவர் சொர்ணம் அசோகன், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சங்கு உதயகுமார்,அரசு விழாக்களில் மக்கள் பிரதிநிதிகளை ஒரு சில அதிகாரிகள் அவமதிக்கும் விதமாக செயல்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஆணையாளர் இளங்கோ, மின்கட்டண பாக்கிக்கு ஊராட்சிகளின் இணை இயக்குனர் மூலம் தீர்வு காணலாம்.

துணைத் தலைவர் நாராயணன், கீழ பட்டமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது. உடனடியாக அதனை பராமரிக்க வேண்டும்.

தீர்மானம்

தலைவர், கழக அரசின் ஓராண்டு சாதனையால், உற்சா கத்தின் உச்சத்தில் உள்ளது உலகத்தமிழினம். இதற்காக முதல்-அமைச்சருக்கும் அவரது அமைச்சரவைக்கும் ஒன்றிய குழுவின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன். அரண்மனை பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் செயல் படுத்த அமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறோம். வாரச்சந்தை, பஸ்நிலைய பிரச்சினைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் பேசினர். அதன்பின்னர் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
மேலும் செய்திகள்