< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் அறப்போராட்டம்

தினத்தந்தி
|
19 May 2022 12:24 PM IST

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விடுதலை செய்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்: சாணார்பட்டி தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கோபால்பட்டி பஸ்நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரறிவாளன் விடுதலை கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் இன்று வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு அறப்போராட்டம் நடத்தினர்.

ஈரோடு:பெருந்துறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

பொன்னேரி அண்ணா சிலை முன்பு பொன்னேரி வெள்ளை துணியால் வாய் கட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர் வேலாயுதம்பாளையம் புகழூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மேலும் செய்திகள்