தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை? ஆவின் நிர்வாகம் விளக்கம்
|ஆவின் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலங்களில் வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிட்டு வருவது வழக்கம்.
சென்னை,
ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்திகளை அச்சிட்டு வினியோகித்து வருகிறது. இந்த முறையானது பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இவ்விழாக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளவையாகும். தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டதில்லை. எனவே இந்த வருடமும் அச்சிடப்படவில்லை என்பதை ஆவின் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.