< Back
மாநில செய்திகள்
அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது பா.ஜ.க - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
மாநில செய்திகள்

அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது பா.ஜ.க - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

தினத்தந்தி
|
14 April 2024 12:42 PM IST

புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியை சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் கடமை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது! புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றி வைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை. பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது.

நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்