< Back
மாநில செய்திகள்
மந்திரபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா
திருவாரூர்
மாநில செய்திகள்

மந்திரபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா

தினத்தந்தி
|
9 Oct 2023 12:43 AM IST

கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது.

தில்லைவிளாகம்:

முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் பெரியநாயகி சமேத மந்திரபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதை முன்னிட்டு யாகம் வளர்க்கப்பட்டு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ராகு மற்றும் கேதுக்கு மஞ்சள், சந்தனம், தேன், சர்க்கரை, தயிர், பால், இளநீர், திரவியபொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு-கேதுவை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்