< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

தினத்தந்தி
|
2 Oct 2023 2:54 AM IST

மதுக்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

மதுக்கூர்:

மோட்டார் சைக்கிள் மோதியது

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வடக்கு சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது58). விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி மலர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

மதுக்கூரில் இருந்து மன்னார்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஆதிதிராவிட தெருவுக்கு செல்லும் சாலை அருகில் சென்ற போது அந்த வழியாக கார்த்திகேயன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஜெகநாதன் மீது மோதியது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில்் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்