< Back
மாநில செய்திகள்
மதுரை ரெயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட்டுக்கு அனுமதி
மாநில செய்திகள்

மதுரை ரெயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட்டுக்கு அனுமதி

தினத்தந்தி
|
9 Jun 2023 6:56 PM IST

மதுரை ரெயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை ரெயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மதுரை ரெயில் நிலைய மேலாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி ரெயில் நிலையத்தில் போட்டோஷூட் நடத்த ரூ.5,000 செலுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்