< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காவிரி டெல்டா பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் - அண்ணாமலை
|20 Jun 2022 7:46 PM IST
காவிரி டெல்டா பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
காவிரி டெல்டா பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "காவிரி டெல்டா பகுதியில் 8 புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது திமுக அரசு.
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலேயே இந்த நிலைமை. இப்படி இயற்கை வளங்களை சூறையாடுவது தான் நீங்கள் கொடுக்கும் பாதுகாப்பா?
விவசாயிகளின் கோரிக்கைகளை திமுக அரசு ஏற்றுப் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் எதிர்பார்ப்பு" என்று கூறியுள்ளார்.