< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
பிறந்தது புத்தாண்டு.. கோயில்களில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்

1 Jan 2023 8:26 AM IST
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பழனி,
ஆங்கில புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறை காரணமாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். பழனி மலை மேலே கூட்டம் அதிகரித்து கானப்படுவதால், ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்ட பின் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கபட்டு உள்ளது.
மேலும், பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.