< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'தலைநிமிர்ந்த தமிழகம் மனங்குளிருது தினந்தினம்' - கருணாநிதி நினைவிடத்தில் செய்யப்பட்ட புத்தாண்டு அலங்காரம்
|1 Jan 2023 10:42 AM IST
கருணாநிதி நினைவிடத்தில் செய்யப்பட்ட புத்தாண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது.
2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் புத்தாண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில், 'தலைநிமிர்ந்த தமிழகம் மனங்குளிருது தினந்தினம்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.