< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டம்: ஆவடியில் 4,000 போலீசார் குவிப்பு
|31 Dec 2023 8:45 AM IST
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை,
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இதில் ஆவடி, செங்குன்றம் உள்பட 50 இடங்களில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடவுள்ளனர்.