சென்னை
பட்டாபிராமில் புதிய மகளிர் போலீஸ் நிலையம்
|பட்டாபிராமில் புதிய மகளிர் போலீஸ் நிலையத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்துவைத்தார்.
தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு மகளிர் போலீஸ் நிலையம் என்ற வகையில் புதிதாக 19 மகளிர் போலீஸ் நிலையங்கள் உருவாக்க தமிழக முதல்-அமைச்சரால் 27-02-2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆவடி பெருநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பட்டாபிராம் சரகத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் பட்டாபிராம் காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தை புதுப்பித்து தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நேற்று காலை ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு புதிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை திறந்து வைத்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீசார், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதிதாக தொடங்கப்பட்ட இந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் போலீஸ் ஆய்வாளர், 2 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 5 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.