< Back
மாநில செய்திகள்
மருத்துவத்துறை, வனத்துறைக்கு புதிய வாகனங்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மருத்துவத்துறை, வனத்துறைக்கு புதிய வாகனங்கள்

தினத்தந்தி
|
16 Sept 2023 12:15 AM IST

மருத்துவத்துறை, வனத்துறைக்கு புதிய வாகனங்களை கலெக்டர் வழங்கினார்

ராமநாதபுரம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பவுண்டேசன் சார்பில் மருத்துவத்துறை பயன்பாடு மற்றும் வன உயிரின பாதுகாப்புக்கான வாகனங்கள் வழங்கும் விழா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பவுண்டேசன் சார்பில் அதன் நிர்வாக மேலாளர், கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் ரூ.47 லட்சம் மதிப்புள்ள ரத்த வங்கி வாகனம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடலோர பகுதியில் வன உயிரினங்களை பாதுகாப்பதற்கான மருத்துவ வசதியுடன் கூடிய வாகனம் ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்ந்து, ரத்த வங்கி வாகனத்தை மருத்துவ இணை இயக்குனர் சகாய ஸ்டீபன், வனத்துறை வாகனத்தை மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் ஆகியோரிடம் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்