ராமநாதபுரம்
புதிய மின்மாற்றி அமைப்பு
|சாத்தமங்கலம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா வரவணீ ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு நீண்ட காலமாக கூட்டம்புளி கிராமத்தில் அமைக்கப்பட்ட மின்மாற்றியில் இருந்து மின்சாரம் சப்ளை செய்வதால் இரவு நேரங்களில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வந்தன.மேலும் மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த கிராமத்தை சேர்ந்த சென்னை மாநகராட்சி நிதிநிலை தணிக்கை குழு சேர்மன் தனசேகரன், சாத்தமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ராஜீவ்காந்தி ஆகியோர் முயற்சியால் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. திருவாடானை மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி, ஆர்.எஸ்.மங்கலம் உதவி மின் பொறியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊரின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மின்மாற்றி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.