< Back
மாநில செய்திகள்
பாளையங்கோட்டையில் புதிய மின்மாற்றி; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பாளையங்கோட்டையில் புதிய மின்மாற்றி; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
6 Oct 2023 2:09 AM IST

பாளையங்கோட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் பகிர்மான வட்டம், நகர்ப்புற கோட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் வி.எம். சத்திரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை ஸ்டார் நகர் பகுதியில் வருங்கால மின் நுகர்வோர்களை கருத்தில் கொண்டு நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.9 லட்சத்து 9 ஆயிரம் செலவில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, பாளையங்கோட்டை வடக்கு வட்டார தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, மின்வாரிய செயற்பொறியாளர் காளிதாசன், உதவி செயற்பொறியாளர் சார்லஸ் நல்லதுரை, சங்கர், உதவி பொறியாளர்கள் மீராபானு, ஜன்னத்துல் சிப்பாப் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார வளாகம் கட்டித்தருமாறு மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று அவரது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.18 லட்சத்தில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இதனை மாணவிகளின் பயன்பாட்டிற்காக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் தஸ்லிமா அயூப்கான், ஏர்வாடி நகர காங்கிரஸ் தலைவர் ரீமா பைசல், நகர தி.மு.க. செயலாளர் அயூப்கான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்