< Back
மாநில செய்திகள்
புதிய டிரான்ஸ்பார்மர்
சிவகங்கை
மாநில செய்திகள்

புதிய டிரான்ஸ்பார்மர்

தினத்தந்தி
|
30 July 2023 12:45 AM IST

புதிய டிரான்ஸ்பார்மர் திறக்கப்பட்டது

காரைக்குடி

காரைக்குடி கே.எம்.சி. காலனி, தேவர் குடியிருப்பு பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டுவந்தனர். இதனால் அவ்வப்போது மின்சாதனங்களும் பழுதாகின. இது குறித்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்து பேசினார். மேலும் மின்வாரிய அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தார். மாங்குடி எம்.எல்.ஏ., நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை ஆகியோர் பரிந்துரையின் பேரில் அப்பகுதியில் கூடுதல் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதனை மாங்குடி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் லதாதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்