< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
புதிய டிரான்ஸ்பார்மர்
|26 July 2023 12:15 AM IST
மதுக்கூர் அருகே காசாங்காட்டில் புதிய டிரான்ஸ்பார்மர் ; அண்ணாதுரை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே காசாங்காட்டில் குறைந்த மின்னழுத்தம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து அங்கு ரூ.4 லட்சத்து 63 ஆயிரத்து 480 செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதை அண்ணாதுரை எம்.எல்.ஏ. திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதற்கான நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் மாறன், உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார், உதவி மின் பொறியாளர் சர்மிளா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செல்வநாயகி, ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.