< Back
மாநில செய்திகள்
கோவை வழியாக திருப்பதிக்கு 15-ந்தேதி முதல் புதிய ரெயில் சேவை
மாநில செய்திகள்

கோவை வழியாக திருப்பதிக்கு 15-ந்தேதி முதல் புதிய ரெயில் சேவை

தினத்தந்தி
|
12 March 2024 4:03 AM IST

புதிய ரெயில் இயக்கப்படுவது, கோவையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை,

தென்னிந்திய ரெயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருப்பதி-கொல்லம் இடையே கோவை வழியாக வாரம் 2 முறை ரெயில் இயக்கப்படுகிறது. இதன்படி கொல்லத்தில் இருந்து புதன், சனிக்கிழமை ரெயில் எண்:- 17422 ரெயில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு காவன்குளம், மாவேலிகரா, திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, வழியாக மாலை 6.32 மணிக்கு கோவை வந்தடைகிறது. பின்னர் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சித்தூர் வழியாக திருப்பதிக்கு அதிகாலை 3.20 மணிக்கு வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்றடைகிறது.

இதேபோல் 17421 என்ற எண் ரெயில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருப்பதியில் இருந்து பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு சித்தூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு இரவு 10.12 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் 10.15 மணிக்கு புறப்பட்டு கொல்லத்துக்கு காலை 6.20 மணிக்கு புதன், சனிக்கிழமைகளில் சென்றடைகிறது. இந்த ரெயில் வருகிற 15-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கோவை வழியாக திருப்பதிக்கு புதிய ரெயில் இயக்கப்படுவது, கோவையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்