< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
முன்னீர்பள்ளத்தில் புதிய தார் சாலை பணி தொடக்கம்
|20 July 2023 12:30 AM IST
முன்னீர்பள்ளத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இட்டமொழி:
பாளையங்கோட்டை யூனியன் முன்னீர்பள்ளம் பஞ்சாயத்து ஜோதிபுரம் அரோமா நகரில் இருந்து ஆரைகுளம் வரையிலும் ரூ.2.54 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. பாளையங்கோட்டை 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் செல்வசங்கர் முன்னிலை வகித்தார்.
பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் போர்வெல் கணேசன், முன்னீர்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் உமா வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.