< Back
மாநில செய்திகள்
புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
17 Oct 2023 10:44 PM IST

பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியினர் காவிரி நீரை தர மறுக்கும் கா்நாடக அரசை கண்டித்தும், அரசியல் லாபத்திற்காக காவிரி நதி நீர் விவகாரத்தில் மவுனம் காக்கும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் பங்கை உடனடியாக வழங்கிட கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்