கன்னியாகுமரி
குமரி மாவட்டத்துக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம்
|குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இடமாற்றம்
தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருவாரூர், நீலகிரி உள்பட 16 இடங்களில் பணியாற்றி வந்த போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஹரிகிரண் பிரசாத், தற்போது ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சுந்தரவதனம், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் குமரி மாவட்டத்துக்கு வந்து பொறுப்பேற்க உள்ளார்.
இந்த தகவல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.