< Back
மாநில செய்திகள்
உலக நன்மை வேண்டி நவ சண்டியாகம்
கரூர்
மாநில செய்திகள்

உலக நன்மை வேண்டி நவ சண்டியாகம்

தினத்தந்தி
|
6 May 2023 12:11 AM IST

உலக நன்மை வேண்டி நவ சண்டியாகம் நடந்தது.

கரூர் காந்திகிராமத்தில் உள்ள ராமகிருஷ்ண யோகாஸ்ரமத்தில் உலக நன்மை வேண்டியும், தொழில் மேன்மையடையவும், உயர்ந்த எண்ணம், நற்பண்பு, மனநிம்மதி கிடைக்க வேண்டியும் சண்டிகா தேவியின் பெரும் வேள்வியான நவ சண்டியாக விழா நேற்றுமுன்தினம் காலை விநாயகர் பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று விநாயகர் பூஜை, புண்யாஹம், தேவி கலச ஆவாஹனம், மூல மந்திர ஜபம், சப்தசதி பாராயணம், 13 அத்யாய ஹோமம், சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, கோ பூஜை, வசோதாரை பூர்ணாஹீதி உபசாரம், தீபாரா தனை கலசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கரூர், கோவை, தேனி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்