< Back
மாநில செய்திகள்
அதிநவீன கண்காணிப்பு கேமராவுடன் புதிய சிக்னல்
திருச்சி
மாநில செய்திகள்

அதிநவீன கண்காணிப்பு கேமராவுடன் புதிய 'சிக்னல்'

தினத்தந்தி
|
25 May 2023 2:10 AM IST

அதிநவீன கண்காணிப்பு கேமராவுடன் புதிய ‘சிக்னல்’ திறக்கப்பட்டது.

மலைக்கோட்டை:

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர் பகுதியில் உள்ள வழித்தடம், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வழித்தடம், திருச்சியில் இருந்து கல்லணை நோக்கி செல்லும் பிரிவு சாலை மற்றும் ஓயாமரி சுடுகாடு வழியாக சத்திரம் பஸ் நிலையம் செல்லும் வழித்தடம் என மொத்தம் நான்கு வழித்தடங்களுக்கான 'சிக்னல்' சஞ்சீவிநகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டது. இதனை நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா தொடங்கி வைத்தார்.

இந்த சிக்னலில் சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் சிக்னலை கடந்து செல்லக்கூடிய அனைத்து வகையான வாகனங்களின் பதிவு எண்கள் மிக தெளிவாக பதிவாகும் வகையிலும், அந்த வாகனத்தை மற்ற இடங்களில் கண்காணிக்கும் வகையிலும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு, ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி, உதவி கமிஷனர்கள் செந்தில்குமார், ஜோசப்நிக்சன், இன்ஸ்பெக்டர்கள் தயாளன், மதிவாணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியையும் போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்