< Back
மாநில செய்திகள்
புதிய பள்ளி கட்டிட பணிகள் ரூ.18 லட்சத்தில்  தொடக்கம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

புதிய பள்ளி கட்டிட பணிகள் ரூ.18 லட்சத்தில் தொடக்கம்

தினத்தந்தி
|
16 Jun 2023 12:15 AM IST

கடலாடி ஒன்றியத்தில் புதிய பள்ளி கட்டிட பணிகள் ரூ.18 லட்சத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.

சாயல்குடி,

கடலாடி ஒன்றியம் சடைமுனியன் வலசை கிராமத்தில் தொடக்கப்பள்ளி கட்டிடம் இடியும் நிலையில் மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். மாணவர்களின் நிலை குறித்து அந்த கிராம மக்கள் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் ஆகியோரிடம் மனு அளித்தனர். சடை முனியன் வலசை கிராம மக்கள் கொடுத்த மனுவை அலுவலர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதிர் கிராம வளர்ச்சி நல வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தெரிவித்தனர். இடியும் நிலையில் உள்ள கட்டிடத்தில் மாணவ- மாணவிகள் பாதுகாப்பற்ற நிலையில் பயின்று வருவதை அறிந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் அந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு தனது சட்டமன்ற நிதியிலிருந்து ரூ.18 லட்சத்தை ஒதுக்கீடு செய்திருந்தார்.

அதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம்முகைதீன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சை, முருகவள்ளி மலைராஜ், இதம்பாடல் ஊராட்சி தலைவர் மங்களசாமி, மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, இளைஞர் அணி பாலமுருகன், முத்துராஜா, சாயல்குடி நீர்பாசன சங்க தலைவர் ராஜாராம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் காதர் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சார்லஸ், மாரியூர் கிளைச் செயலாளர் காசி, ஏர்வாடி கதிர், இளையா, செல்வேஸ்வரன் இஸ்காக், பாலமுருகன், தில்லை ஈஸ்வரி உள்ளிட்ட தி.மு.க. சாயல்குடி கிழக்கு ஒன்றிய, கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்