< Back
மாநில செய்திகள்
புதிய நெல் கொள்முதல் நிலையம், ரேஷன் கடை கட்டிடங்கள்அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

புதிய நெல் கொள்முதல் நிலையம், ரேஷன் கடை கட்டிடங்கள்அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
22 Jan 2023 12:45 AM IST

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட புதிய கொள்முதல் நிலையம், ரேஷன் கடை கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட புதிய கொள்முதல் நிலையம், ரேஷன் கடை கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

அரசு கட்டிடங்கள் திறப்பு விழா

திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரேஷன் கடை, கோட்டூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை, பில்லாளி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது.

இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தனி தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:- தமிழக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருமருகல் ஒன்றியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். ஏனங்குடி பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) ராஜாராம், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அருளரசு, திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன், ஆரூர் மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்