< Back
மாநில செய்திகள்
தமிழ், ஆங்கில எழுத்துக்களை சரளமாக வாசிக்க புதிய திட்டம்- முதன்மைக்கல்வி அதிகாரி சிவகுமார்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தமிழ், ஆங்கில எழுத்துக்களை சரளமாக வாசிக்க புதிய திட்டம்- முதன்மைக்கல்வி அதிகாரி சிவகுமார்

தினத்தந்தி
|
13 Jan 2023 12:30 AM IST

4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கில எழுத்துக்களை சரளமாக வாசிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவகுமார் கூறினார்.

4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கில எழுத்துக்களை சரளமாக வாசிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவகுமார் கூறினார்.

மிஷன் டெல்டா திட்டம்

தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை இனங்கண்டறிய, சரளமாக வாசிக்க, எழுத தேவையான அடிப்படை மொழி அறிவு. அடிப்படை கணித செயல்பாடுகள் ஆகியவற்றில் திறனடைவு பெறாத மாணவர்களை வருகிற மார்ச் 31-ந்தேதிக்குள் உரிய திறனடைவு பெற தகுதிப்படுத்திட மிஷன் டெல்டா என்ற செயல் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி திறனடைவு பெறாத மாணவர்கள், படிப்பில் ஆர்வம் குறைவு, வருகை சதவீதம் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக நடத்தப்பெறும் பாடங்களில் மற்ற மாணவர்களைப் போல் இல்லாமல் குறைவாகவே திறனடைவு பெறுகின்றனர். இதனால் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்கள் கற்றலில் கவனம் செலுத்த இயலாமல் பின்தங்கும் நிலை ஏற்படுகின்றது.

யாரும் இல்லை

மேலும் இடைநிற்றலுக்கும் காரணமாவதால், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் பொருட்டும் மாணவர்களின் கற்றல் நிலையை உயர்த்திடவும், அனைத்து மாணவர்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை இனங்கண்டறிய சரளமாக வாசிக்க இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே 2023-2024-ம் கல்வி ஆண்டில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை இனங்கண்டறிய, சரளமாக வாசிக்க, எழுத, அடிப்படை கணித செயல்பாடுகளில் திறனடைவு பெறாத மாணவர்கள் எவரும் தஞ்சை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை எட்டுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்