< Back
மாநில செய்திகள்
புதிய சாலை அமைக்கும் பணி ெதாடக்கம்
சிவகங்கை
மாநில செய்திகள்

புதிய சாலை அமைக்கும் பணி ெதாடக்கம்

தினத்தந்தி
|
7 Feb 2023 12:15 AM IST

காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

காரைக்குடி

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சிஉள்ளது. இங்கு வீட்டு வசதி வாரியம் அருகே முத்தாலம்மன் கோவில் நாடக மேடை முன்பு யூனியன் தலைவர் சரண்யாசெந்தில்நாதன் பரிந்துரையின் பேரில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் தேவிமீனாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோபால் மற்றும் ராமதாஸ், புருஷோத்தமன், ராமானுஜம், வெங்கடேசன், நடை பயிற்சியாளர் சங்க தலைவர் கிருஷ்ணன், போக்குவரத்து நகர் ராமச்சந்திரன், சமூக ஆர்வலர் புதுமை மகேந்திரன், ஒப்பந்தக்காரர் சந்திரன், சுரேஷ் மற்றும் மகளிர் சேவை குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர். அதைதொடர்ந்து டிரைவர்ஸ் காலனி மெயின்ரோடு கிராம நிர்வாக அலுவலர் காலனி, சூரியகாந்தி வீதி வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

மேலும் செய்திகள்