< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அர்ச்சகர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
|17 Dec 2022 2:44 PM IST
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதன்படி அர்ச்சகர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள், கோவில்களின் ராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள் உள்பட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.