< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
ரூ.16¼ லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம்
|13 Jun 2023 11:57 PM IST
அரக்கோணம் அருகே ரூ.16¼ லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட சு.ரவி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த வேடல் காந்திநகரில் புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என்று சு.ரவி எம்.எல்.ஏ.விடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, ஏ.எம்.நாகராஜன், நரேஷ் உள்பட கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.