ராமநாதபுரம்
ரூ.12 லட்சத்தில் புதிய ரேஷன்கடை
|சின்னத்தொண்டியில் ரூ.12 லட்சத்தில் புதிய ரேஷன்கடையை பேரூராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
தொண்டி,
தொண்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சின்னத்தொண்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ரேஷன் கடை கட்டிட கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும் விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் 1-வது வார்டு பகுதியில் சேதமடைந்த பேவர் பிளாக் சாலை சீரமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட காலணிகளை வழங்கினார். தொண்டி மகாசக்திபுரம் பகுதியில் உள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை ஆய்வு செய்தார். ஆய்வின் போது அவருடன் பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உடன் சென்றனர்.