பெருங்குடி-கடலூருக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பு -தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியது
|பெருங்குடி-கடலூருக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது தொடர்பான பணிக்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது.
சென்னை,
சென்னை மற்றும் கடலூர் ரெயில்வே பிரிவுகளில் புதிய ரெயில் பாதை அமைப்பதற்கு தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. புதிய ரெயில் பாதை அமைப்பு பணிகளுக்கான திட்ட கண்காணிப்பு சேவைகளுக்கான (பிஎஸ்எஸ்) டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதற்கான விளம்பரத்தை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வேளச்சேரி-பரங்கிமலை
சென்னை மற்றும் கடலூர் பிரிவுக்கு இடையே பெருங்குடியில் இருந்து கடலூர் வரை 179.28 கி.மீ. நீளத்துக்கு புதிய ரெயில் பாதை; சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4.32 கி.மீ. நீளமுள்ள 4-வது பாதை;
எம்.ஆர்.டி.எஸ். என்ற பறக்கும் ரெயில் 2-வது திட்டத்தில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரெயில் பாதை விரிவாக்கம் ஆகிய 3 திட்டங்களுக்கான கண்காணிப்பு சேவைகளுக்கான டெண்டர் கோரப்படுகிறது. இந்த டெண்டர் புள்ளிகளை வரும் 26-ந்தேதி மாலை 3 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.