< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்திற்கு புதிய தலைவர் பொறுப்பேற்பு
|30 Sept 2023 3:48 AM IST
செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்திற்கு புதிய தலைவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து தலைவராக இருந்த கருப்பசாமி விபத்தில் பரிதாபமாக இறந்தார். அதனை தொடர்ந்து அந்த பஞ்சாயத்தில் துணைத்தலைவராக பணியாற்றி வந்த மாரியப்பன் பொறுப்பு தலைவராக பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து நேற்று மதியம் செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முறைப்படி மாரியப்பன் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் புகழேந்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிகுமார், உதவியாளர் தர்மர், ஊராட்சி செயலாளர் கனகமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள், செங்கமல நாச்சியார்புரம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.