< Back
மாநில செய்திகள்
புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் - ப.சிதம்பரம்
மாநில செய்திகள்

புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் - ப.சிதம்பரம்

தினத்தந்தி
|
19 Aug 2023 5:01 PM GMT

ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதிவிட்டு புதிய சட்டங்களுக்கு பெயரை மட்டும் இந்தியில் வைக்கின்றனர் என்று ப.சிதம்பரம் எம்.பி. கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

3 குற்றவியல் சட்டங்களை மறுசீரமைத்து அதற்கு இந்தியில் பெயர் மாற்றம் செய்து புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.. நான் இந்தியில் பெயர் வைப்பது கூடாது என்று சொல்லவில்லை. ஆங்கிலத்தில் சொல்லும்போது ஆங்கில பெயர் இருக்க வேண்டும். இந்தியில் சொல்லும்போது இந்தி பெயர் இருக்க வேண்டும்.

இந்த சட்டங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் வரைவு சட்டம் தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தில் இந்த சட்டத்தை எழுதும்போது ஆங்கிலத்தில் தான் எழுதப்படுகிறது. பிறகு இந்தியில் மொழி பெயர்க்கின்றனர். நீதிமன்றங்களில் ஆங்கில கடிதம் தான் பெரும் பகுதி பயன்படுத்தப்படுகிறது. இந்தி மொழி பெயர்ப்பை யாரேனும் எடுத்து சொன்னால் கூட அதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல், என்ன பிரிவு என்று நீதிபதிகளே கேட்கின்றனர். அதனால் ஆங்கிலத்தில் இருப்பது தான் எல்லோருக்கும் பழக்கமானது.

ஆங்கில மொழி சட்ட வரைவுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும். அதனை இந்தியில் மொழி பெயர்த்துக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் வைக்கின்றனர். அது வாயிலேயே நுழையவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்