< Back
மாநில செய்திகள்
இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 62 பேருக்கு புதிய வீடுகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 62 பேருக்கு புதிய வீடுகள்

தினத்தந்தி
|
18 Sept 2023 1:21 AM IST

செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 62 பேருக்கு புதிய வீடுகள் கட்டப்பட்ட நிலையில் அதனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

சிவகாசி,

செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 62 பேருக்கு புதிய வீடுகள் கட்டப்பட்ட நிலையில் அதனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

புதிய வீடுகள்

விருதுநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி செவலூர், அனுப்பன்குளம், விருதுநகர் குல்லூர்சந்தை ஆகிய இடங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்கள் உள்ளன.

போதிய குடியிருப்பு வசதிகள் இல்லாமல் தவித்து வந்த இப்பகுதியினரின் கோரிக்கையை ஏற்று செவலூரில் ரூ.3 கோடியே 11 லட்சம் செலவில் 62 வீடுகளும், அனுப்பன்குளத்தில் ரூ.40 லட்சம் செலவில் 8 வீடுகளும், குல்லூர் சந்தையில் ரூ.3 கோடியே 51 லட்சம் செலவில் 70 வீடுகள் என ரூ.7 கோடியே 2 லட்சம் செலவில் 140 புதிய வீடுகள் கட்டப்பட்டன.

திறப்பு விழா

இதன் திறப்பு விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதனை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் அரசு கட்டி கொடுத்துள்ள வீடுகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றார்.

சிவகாசி அருகே உள்ள செவலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குமுதினி என்ற பெண் புதிய வீடுகளை கட்டி கொடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பயனாளிகளுக்கு கலெக்டர் ஜெயசீலன் புதிய வீட்டிற்கான சாவி மற்றும் 8 பாத்திரங்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

இதில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், சாத்தூர் ஆர்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் லோகநாதன், ஸ்ரீதர், சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, தேவ ஆசீர்வாதம், பஞ்சாயத்து தலைவர் சித்ராதேவி சக்திவேல், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்க ராசா, வக்கீல் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்