< Back
மாநில செய்திகள்
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
13 Dec 2022 10:39 PM IST

ஆம்பூர் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆம்பூரை அடுத்த குளித்திகை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 19). இவருக்கும் சாத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேந்தருக்கும் (20) சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் சாத்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஷூ தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று சினேகா வீட்டில் புடவையால் தூக்குப்போட்டுக்கொண்டார்.

அவரை உறவினர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி சில மாதங்களே அவதால் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்