பெரம்பலூர்
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தை ேசர்ந்தவர் நதியா(வயது 22). இவருக்கும், திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா பெருவளப்பூர் கிராமத்தில் வசிக்கும் பிரபாகரனுக்கும்(32) கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் ஆடி மாதத்தையொட்டி அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக நதியாவிற்கு வயிற்றுவலி இருந்து வந்ததாகவும், இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரது உடலை பாடாலூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதியும் விசாரணை நடத்தி வருகிறார்.