< Back
மாநில செய்திகள்
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
31 July 2022 9:39 PM IST

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாமியார் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அழகியபாண்டியபுரம்:

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாமியார் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுப்பெண்

நாகர்கோவில் அறுகுவிளையை சேர்ந்தவர் வினு. இவருடைய மகள் அபிராமி (வயது 22). இவருக்கும், பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம்காலனியை சேர்ந்த மனோஜ் (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

மனோஜ் நாகர்கோவிலில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு அபிராமி தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். அங்கு மனோஜின் தாயார் நாகேஸ்வரி, பாட்டி கிருஷ்ணம்மாளும் தங்கி வந்தனர்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அபிராமி தனது அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த கணவரும், அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பூதப்பாண்டி போலீசாருக்கும், அபிராமியின் பெற்றோருக்கும் தகவல் ெகாடுத்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை போலீசில் புகார்

மேலும் இது தொடர்பாக அபிராமியின் தந்தை வினு பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், மனோஜின் தாயார் நாகேஸ்வரி மற்றும் பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் தனது மகளிடம் அடிக்கடி தகராறு செய்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறியுள்ளார்.

அதன்பேரில் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே சமயத்தில் திருமணமாகி 4 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட உள்ளது. புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்