< Back
மாநில செய்திகள்
சமையல் செய்ய கற்றுக்கொள் என தாய் கண்டித்ததால் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை...!
மாநில செய்திகள்

'சமையல் செய்ய கற்றுக்கொள்' என தாய் கண்டித்ததால் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை...!

தினத்தந்தி
|
22 Jan 2023 8:41 AM IST

‘சமையல் செய்ய கற்றுக்கொள்’ என்று தாய் கண்டித்ததால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கீழகோடன்குளத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மகள் கிறிஸ்டில்லா மேரி (வயது 19). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற 1-ந்தேதி நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர். கிறிஸ்டில்லா மேரி அடிக்கடி செல்போன் பார்த்துக்கொண்டு வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்தார்.

விஷம் குடித்து மயங்கினார்

இந்த நிலையில் உனக்கு திருமணம் நடக்க உள்ளது. அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக்கொள் என்று கிறிஸ்டில்லா மேரியை அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதனால் வேதனை அடைந்த கிறிஸ்டில்லா மேரி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார்.

பின்னர் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்டில்லா மேரி பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்