< Back
மாநில செய்திகள்
புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
1 May 2023 1:08 AM IST

புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குன்னம்:

விஷம் குடித்தார்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி(வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது.

இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி கடந்த 26-ந் தேதி விஷம் குடித்து மயக்கமடைந்தார்.

சாவு

உடனடியாக அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்