< Back
மாநில செய்திகள்
திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை
மாநில செய்திகள்

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை

தினத்தந்தி
|
24 Nov 2023 5:46 AM IST

ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவை நேற்று தொடங்கியது.

கே.கே.நகர்,

ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவை நேற்று தொடங்கியது. அதன்படி பெங்களூருவில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு விமானம் புறப்பட்டு நள்ளிரவு 1.28 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த விமானத்தில் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு 30 பயணிகள் பயணம் செய்தனர். மீண்டும் இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.40 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் 78 பயணிகள் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு பயணம் செய்தனர். இந்த விமான சேவையானது திருச்சியில் இருந்து திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படுவதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்