< Back
மாநில செய்திகள்
பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க கடற்கரை-செங்கல்பட்டு இடையே புதிய மின்சார ரெயில்
சென்னை
மாநில செய்திகள்

பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க கடற்கரை-செங்கல்பட்டு இடையே புதிய மின்சார ரெயில்

தினத்தந்தி
|
26 Sept 2023 8:01 AM IST

பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிய மின்சார ரெயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக ஒரு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. மாலை 6.14 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் இந்த மின்சார ரெயில் இரவு 8 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

இதேபோல மறுமார்க்கமாக இரவு 8.45 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் இரவு 10.40 மணிக்கு கடற்கரையை வந்தடையும். இந்த ரெயில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மட்டும் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்